24
847 days ago
வெட்டி சாய்க்கபட்ட லஞ்ச ஊழல் போராளி!
************************************
திருவண்ணாமலை ராஜ்மோகன், நீதிபதிகள், அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகளின் முறைகேடு குறித்து உயர்நீதி மன்றம் வரை சென்று பல வழக்குகள் நடத்தி போராடி கொண்டிருந்தவர். பல்வேறு சமூக அவலங்களையும் ஊழல், லஞ்ச அதிகாரிகளையும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர்.
இவரை போன வாரம் காலை பொழுதில் ஒரு கும்பல் வெட்டி சாய்த்தது. உண்மைக்காக போராடிய ஒரு சிலரையும் இப்படி கொன்று குவிப்பது சமூக நலனுக்கு நல்லதா..?? இத்துபோன நித்தியை விட இவர் மறைவு குறித்து அதிகம் பேசியிருக்க வேண்டும். போராளிகளுக்கு சமூக ஆதரவு மிக முக்கியம். செத்தாலும் கேட்க ஆளில்லையா..??இதற்கு இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது..?? எல்லோரும் மவுனம் காப்பது எதற்கு...??
இவரின் மரணத்துக்கு நியாயம் வேண்டியும், சமூக ஆர்வலர்களுக்கான பாதுகாப்பு வேண்டியும் முதலமைச்சரின் ஸ்பெஷல் செல்லுக்கு ஈமெயில் லாவது அனுப்புங்கள் நண்பர்களே..!
CM Special Cell: cmcell@tn.gov.in
Tiruvannamalai Collector: collrtvm@tn.nic.in
ADGP/Commissioner: cop@vsnl.net - From Facebook by Sevvel Kumaran

0 Comments
Realtime comments disabled