22
854 days ago
#BalajiIAS ஆட்சியர் மாற்றம்! நீதிக்கு தண்டனை!
அமைச்சராகட்டும்.. ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஆகட்டும்.. ஒருக்காலும் அடி பணிய மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பாலாஜி.. சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கான தேர்வில் அமைச்சரின் சிபாரிசுகளைப் புறக்கணித்துவிட்டு, தகுதி உள்ளவர்களை மட்டுமே தேர்வு செய்தார். இவரது நேர்மைக்குக் கிடைத்த பரிசாகத்தான் விருதுநகரிலிருந்து மாற்றி காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறது இந்த அதிமுக ஆட்சி. கோபுரக் கலசமாக இருந்தாலும் குப்பையில் கிடந்தாலும் தங்கம் தங்கம்தான். தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் என்னும் சாதி ரீதியிலான அடையாளத்தை இவருக்கு எதிராக முன் வைத்தே ஆளும் கட்சியினர் மாற்றம் செய்தார்கள். ஆனாலும், சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் நியமனத்தில் ஆளும் கட்சியினரின் அச்சுறுத்தலை ஒரு பொருட்டாக எண்ணாமல் இவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் வரலாற்றில் இவரது பெயரைப் பொன்னெழுத்துக்களால் பொறித்திருக்கிறது. பாலாஜி இ.ஆ.ப. போன்றவர்கள்தான் நம் நாட்டின் தலையெழுத்தை மாற்றி அமைக்க வேண்டும். # இணையதளம்

0 Comments
Realtime comments disabled